
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் அருகே திருவேடகம் காலனியில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதி ஆளப்பன் கூறியதாவது: இங்குள்ள காலனி தெருக்களில் பல இடங்களில் ரோடு சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளன. பல இடங்களில் மண் ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மழைக்காலங்களில் வாகனம் ஓட்டுவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரோட்டை சீரமைக்க வேண்டும் என்றார்.