/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் கோயிலில் கொடியேற்றம் பிப். 7ல் தெப்பத் திருவிழா
/
திருப்பரங்குன்றம் கோயிலில் கொடியேற்றம் பிப். 7ல் தெப்பத் திருவிழா
திருப்பரங்குன்றம் கோயிலில் கொடியேற்றம் பிப். 7ல் தெப்பத் திருவிழா
திருப்பரங்குன்றம் கோயிலில் கொடியேற்றம் பிப். 7ல் தெப்பத் திருவிழா
ADDED : ஜன 30, 2025 05:44 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடந்தது. கொடிப்பட்டம் யானை தெய்வானைமீது வைத்து ரத வீதிகளில் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கும். யானை புத்துணர்வு முகாமிற்கு சென்றுள்ளதால் கொடிப்பட்டம் பல்லக்கில் வைத்து வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பிப்.7ல் தெப்பத் திருவிழா நடக்கிறது.
நேற்று காலை திருவாட்சி மண்டபத்தில் விநாயகர், சீவிலி நாயக்கர் முன்பு யாக பூஜை முடிந்து சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. திருவிழா நடக்கும் பிப். 7வரை தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர்.
பிப். 6 காலை தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி முடிந்து 16 கால் மண்டபம் முன்பு உள்ள சிறிய வைரத் தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். பிப். 7 காலை மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத் திருவிழா நடக்கும். இரவு சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன்பு சுவாமி மட்டும் தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹார லீலை நடைபெறும்.