/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு
/
வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு
ADDED : ஆக 08, 2025 02:51 AM
சோழவந்தான்: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் விளைந்த பூக்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
விக்கிரமங்கலம், மேலப்பெருமாள்பட்டி, சக்கரப்ப நாயக்கனுார், பானா மூப்பன்பட்டி வட்டார பகுதிகளில் ஏராள மான விவசாயிகள் மல்லிகை, முல்லை, பிச்சி, ரோஜா உட்பட ஏராளமான பூக்களை பயிரிட்டுள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு பூ வரத்து அதிகம் இருந்ததால் குறைந்த விலைக்கு பூக்களை விற்க வேண்டிய நிலை இருந்தது.
'சென்ட்' தயாரிப்பு நிறுவனங்களுக்கு மல்லிகை ஒரு கிலோ ரூ. 200க்கு விற்கப்பட்டது. பறிப்பு கூலியை விட குறைவான விலைக்கு விற்றது.
தற்போது காம்பு சூம்பல், சொத்தை, கருகல், செம்பேன் உள்ளிட்ட நோய் தாக்கு தலாலும், காலநிலை மாற்றத்தாலும் பூ விளைச்சல் குறைந்து உள்ளது. இதனால் பூக்கள் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.
நேற்று மல்லிகை ஒரு கிலோ ரூ. 700 முல்லை ரூ. 400, பிச்சி ரூ. 350, ரோஜா ரூ.200க்கு விற்கிறது. ஆடி மாதத்தில் கோயில்களில் திரு விழாக்கள் நடைபெறுவதாலும், பூக்கள் நல்ல விலைக்கு விற்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.