ADDED : நவ 01, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவுத்திருவிழா நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பாரம்பரிய உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
சிறுதானிய கூழ், புட்டு, முளைக்கட்டிய பாசிப்பயறு வகைகள், கடலைப்பருப்பு, மோர்குழம்பு, கேரட், வெண்டைக்காய் உள்ளிட்ட இயற்கையான உண்ணும் காய்கறிகள், பழங்கள், பாரம்பரிய இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகளை சேகரித்து மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினர். தலைமையாசிரியர் மதன்பிரபு வரவேற்றார். எம்.எல்.ஏ., அய்யப்பன், கல்வி அலுவலர் தேவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் பாரம்பரிய உணவுகளின் அவசியம் குறித்து பேசினர்.

