ADDED : ஜூன் 25, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மேலவாசல் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் தியாகராஜன் ஆய்வு செய்தார்.
மாணவர்களின் வருகை பதிவேடு, காலை உணவுத் திட்டப் பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பின் முத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களிடம் கலந்துரையாடினார். அவர்களுடன் உணவும் சாப்பிட்டார். மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா, துணைமேயர் நாகராஜன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் உடன் சென்றனர்.