/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் முகாம்
ADDED : மார் 20, 2024 06:17 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் பயண சலுகை வழங்கும் திட்டத்தில் பார்வையற்ற, உடல் இயக்க குறைபாடுள்ள, காதுகேளாத, வாய்பேசாத, மனவளர்ச்சி குன்றியோருகு கல்வி, பணிபுரிதல், பயிற்சி பெறுதல் உட்பட பல்வேறு காரணங் களுக்காக இலவச பயண சலுகை வழங்க சிறப்பு முகாம் ஆண்டுதோறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், போக்குவரத்துக் கழகம் சார்பில் நடந்து வருகிறது.
தற்போது லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால் தற்போது மார்ச் 25, 26 தேதிகளில் பார்வையற்றோருக்கும், மற்றவர்களுக்கு மார்ச் 27 ம் தேதியும் மதுரை காந்தி மியூசியத்தில் நடக்க உள்ளது.
இதில் இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கப்படும்.
இதில் பங்கேற்கும் ஏற்கனவே இலவச பயண அட்டை பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பழைய பஸ் பயண சலுகை அட்டையின் அசல் மற்றும் நகல், பணிபுரியும் அல்லது பயிற்சிபெறும் நிறுவனங்களிடம் பெறப்பட்ட சான்றுடன் மேற்கண்ட தங்களின் முகாம் நாட்களில் பங்கேற்கலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

