/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாளை முதல் போட்டித்தேர்வு இலவச வகுப்பு
/
நாளை முதல் போட்டித்தேர்வு இலவச வகுப்பு
ADDED : நவ 16, 2025 03:25 AM
மதுரை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.
மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பொது அறிவு, நுண்ணறிவு, திறனறிவு, காரணவியல், மொழி அறிவு பாடப்பிரிவுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன.
இத்தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்களுக்கு நாளை(நவ.17) காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க http://tamilnaducareerservices.tn.gov.in ல் தங்கள் விவரங்களை பதிவு செய்து, பாடக்குறிப்பு, நடப்பு நிகழ்வுகளை பி.டி.எப்., வடிவில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மைய துணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

