/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
/
ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
ADDED : நவ 16, 2025 03:25 AM
மதுரை: ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் கும்பாபிஷேக பணிகளை முழுமைப் படுத்துதல், நன்கொடையாளர் விபரங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநில துணைத் தலைவர் சுந்தரவடிவேல் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது: கும்பாபிஷேகங்கள் அவசரகதியில் இல்லாமல், முழுமையாக நடைபெற வேண்டும். கும்பாபிஷேக பணிகள், நன்கொடையாளர்கள் விபரத்தை கோயில் முன் பக்தர்களின் பார்வைக்காக வைக்க வேண்டும். மதுரை செல்லுார் திருவாப்புடையார் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தையும், நந்தவனத்தையும் சரி செய்ய வேண்டும். அம்பாள் பிரகாரத்தில் உள்ள கல்துாண்களை சிற்ப சாஸ்திர விதிப்படி பராமரித்தல் அவசியம். மின் இணைப்பு என்ற பெயரில் கல் துாண்கள், சுவர்களில் துளையிடுவதை தவிர்க்க வேண்டும். கலெக்டரும், மீனாட்சி கோயில் இணை கமிஷனரும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

