நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் கிராமப்புற பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மதுரை எஸ்.எஸ். காலனி பெட்கிராட் நிறுவனத்தில் அளிக்கப்படுகிறது.
நான்கு மாத பயிற்சி, 3 மாத கால ஊதியத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இலவச உணவு, தங்குமிடத்துடன் புத்தகம், சீருடை, இன்சூரன்ஸ், அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகரைச் சேர்ந்த 35 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை. அலைபேசி: 89030 03090.

