நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மத்திய அரசு திட்டத்தின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் சணல் சார்ந்த இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜூட்பேக், லேப்டாப் பேக், 'லஞ்ச் பேக்', ஸ்கூல் பேக் உட்பட 17 வகையான பேக் தயாரிக்க 50 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதிற்குட்பட்ட பெண்கள் பங்கேற்கலாம். மத்திய அரசு சான்றிதழ், கைவினை கலைஞருக்கான அடையாள அட்டை பெற்று தரப்படும். தொழிலுக்கான திட்ட அறிக்கை தயாரித்தல், சந்தைப்படுத்துதல், ஆன்லைன் வியாபாரம் கற்றுத்தரப்படும். அலைபேசி: 89030 03090.