ADDED : மார் 29, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு அரசு மருத்துவ தேர்வு வாரியம் அறிவித்துள்ள 425 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு இலவச பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 26 ல் துவங்கி நடந்து வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனி வரை இரவு 7:00 முதல் 9:00 மணி வரை நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ, மின்னஞ்சல் Peeomadurai17@gmail மூலம் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
தேர்வுக்கு ஏதுவாக புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் டெட் 1, 2 மற்றும் டி.ஆர்.பி., தேர்வுகளுக்கான புத்தகங்களும் உள்ளன. பயனாளிகள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.