/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இலவச வேட்டி சேலை: ஆர்.ஐ., க்கள் குமுறல்
/
இலவச வேட்டி சேலை: ஆர்.ஐ., க்கள் குமுறல்
ADDED : ஜன 10, 2024 06:24 AM
மேலுார் : மேலுாரில் பொங்கல் பரிசான வேட்டி, சேலைகளை 8 வருவாய் ஆய்வாளர்கள்(ஆர்.ஐ.,) 172 கடைகளுக்கு சொந்த செலவில் கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தாலுகா ரேஷன் கடைகளில் 71,827 வேட்டி, 73,460 சேலைகள் கொடுக்க வேண்டும். இன்று(ஜன.,10) முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஆட்டுக்குளம் கோடவுனில் இருப்பு வைத்துள்ளனர். இங்கிருந்து ஆர்.ஐ.,க்கள் ஒவ்வொரு கடைக்கும் சொந்த செலவில் கொண்டும் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: கடைகளுக்கு கொண்டு செல்ல ரூ.பல ஆயிரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. தவிர வழக்கமான பணிகள் பாதிக்கின்றன. இதை தவிர்க்க நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

