ADDED : டிச 14, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரமங்கலம் : வி.கோவில்பட்டி சுரேஷ் பாபு 37, டிரைவர். டிச.,11 காலை உண்டாங்கல் மதுக்கடை பின்புறம் காயங்களுடன் இறந்து கிடந்தார். விக்கிரமங்கலம் போலீசார் விசாரித்தனர்.
சுரேஷ் பாபுவின் நண்பர்களான மதுரை புது விளாங்குடி முத்துவேல் 27, விக்னேஷ் 39, மது போதையில் கொலை செய்தது தெரிந்தது.
இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது வழிப்பறி, கொள்ளை மற்றும் நான்கு வழிச்சாலை லாரிகளில் திருடிய வழக்குகள் உள்ளன.
இதில் உதவியாக இருந்த சுரேஷ்பாபு திருட்டு குறித்து வெளியே கூறியதால் கொலை செய்துள்ளனர்.

