UPDATED : நவ 14, 2026 12:45 AM
ADDED : நவ 14, 2026 12:42 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: குருவித்துறையில் குரு பகவான் கோயில் செல்லும் வழியில் மயானம் உள்ளது. இதில் தெருவிளக்குகள் அமைக்காததால் இரவில் இறுதிச் சடங்குகள் செய்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. டார்ச் லைட், டூவீலர்கள், கார்களை ஸ்டார்ட் செய்து அதன் முகப்பு விளக்குகள் மூலம் கிடைக்கும் வெளிச்சத்தில் இறுதிச்சடங்குகள் நடக்கின்றன. ஏற்கனவே அமைக்கப்பட்ட தெரு விளக்கும் முறையான பராமரிப்பின்றி பழுதாகிவிட்டது.
வெளிச்சம் இல்லாததால் சுற்றிலும் அடர்ந்த செடி, கொடிகளிலிருந்து வெளியேறும் விஷ ஜந்துக்களால் விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
