ADDED : அக் 03, 2025 01:28 AM
மதுரை: மதுரை கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில், மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து ரயில்வே காலனி வளாகம் சுத்தம் செய்யப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன. விழிப்புணர்வு பேரணி சென்றனர்.கூடுதல் கோட்ட மேலாளர் ராவ், 'கதி ஷக்தி' தலைமை திட்ட மேலாளர் ஹரிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
சுகாதார துறை தலைமையில் நடந்த துாய்மைப் பணியில், மதுரைக் கல்லுாரி, தியாகராஜர் கல்லுாரி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, லதா மாதவன் பொறியியல் கல்லுாரியை சேர்ந்த 80 என்.சி.சி., மாணவர்கள் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தை சுத்தம் செய்தனர்.
பயணிகளுக்கு துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை என்.சி.சி., அதிகாரிகள் கார்த்திகேயன், ஞானபிரகாசம் செய்தனர். 7வது என்.சி.சி., பட்டாலியன் ராணுவ அதிகாரிகள் உடனிருந்தனர்.