ADDED : ஆக 20, 2025 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்; சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி கணேசபுரத்தில் பாசனக் கால்வாயில் குப்பை கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
வைகைப் பெரியாறு கால்வாயில் இருந்து சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு செல்லும் கால்வாயில், பொட்டமடையில் இருந்து பிரிந்து கருப்பட்டி, இரும்பாடி பாசனத்திற்கு கால்வாய் செல்கிறது. இக்கால்வாயில் அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது.
இதில் கொட்டப்படும் கழிவுகள் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு வயல்களுக்குள் செல்கின்றன. கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு போதுமான தண்ணீர் செல்ல முடியாத நிலை உருவாகிறது. இதனால் விவசாயம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.