நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன்  மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
பொருளாளர் பழனி வரவேற்றார். மாநில தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் விக்னேஷ் குமார் முன்னிலை வகித்தார். அடுத்த ஆண்டுக்கான செயல்திட்டங்கள், வீரர்களை உருவாக்குவது,  தேவையான வசதிகளை ஏற்படுத்துவது,  தேசிய போட்டியில் வீரர்களை பங்கு பெற செய்வது குறித்து ஆலோசித்தனர்.
துணைத் தலைவர்கள் சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, சிவசங்கர், தர்மலிங்கம், லுாயிராஜ், செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்ட சைக்கிளிங் தலைவர் ஓவிய நாதன் ஏற்பாடு செய்திருந்தார்.

