தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்


ADDED : டிச 29, 2024 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2024 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் தமிழ்நாடு தேவேந்திரகுல மத்திய மாநில அரசு ஊழியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் அழகன் தலைமையில் நடந்தது.

பொருளாளர் பஞ்சபாண்டி வரவேற்றார். மாநிலத் தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ஈழவேந்தன், பொருளாளர் ஆதிமுத்து முன்னிலை வகித்தனர்.

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியலினத்தில் இருந்து நீக்கி பிரதிநிதித்துவம் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு ஊழியர்கள் பொது பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார். புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிர்வாகிகள் பிரான்சிஸ் சேவியர், தேவகி, மனோஜ்குமார், பெரியசாமி, பிரசாத், காளிமுத்து, ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைத் தலைவர் குமார் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us