நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை எல்லீஸ்நகர் ஜூபிடர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மூத்த குடி நுகர்வோர் அமைப்பு தலைவர் கர்ணன் பரிசு வழங்கினார். அமைப்பு செயலாளர் சுரேஷ் ஆண்டறிக்கை தாக்கல் செய்தார். ஆனந்தேஸ்வரர் கோயில் அருகே பூட்டிக் கிடக்கும் மாநகராட்சி பூங்காவை திறக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். நிர்வாகிகள் ஈஸ்வர பிரசாத், உமாராணி, வெங்கடசுப்பிரமணியன், சந்தனமாரி, சுப்பிரமணியன், வைத்தியநாதன், பூவநாதன், ஜாபர் பங்கேற்றனர்.
இலவச மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் முரளி பாஸ்கர் மருந்து வழங்கினார்.

