நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு ஜூபிடர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் ராமநாதன் தலைமையில் நடந்தது.
அப்பகுதி ஆனந்தேஸ்வரர் கோயில் அருகிலுள்ள மாநகராட்சி பூங்கா பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. ஹவுசிங் போர்டு வணிக பயன்பாட்டு கடைகள் இடிந்த நிலையில் சமூக விரோதிகளின் திறந்தவெளி 'பார்' ஆக மாறியுள்ளது. அக்கடைகள், பூங்கா ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் மாடசாமி, பொருளாளர் ராஜூ, அமைப்புச் செயலாளர் சுரேஷ், பங்கேற்றனர்.

