/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவசர கதியில் கிரிவலம் ரோடு சீரமைப்பு
/
அவசர கதியில் கிரிவலம் ரோடு சீரமைப்பு
ADDED : அக் 28, 2025 03:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் 3.25 கி.மீ., துாரத்திற்கு கிரிவலம் ரோடு உள்ளது. தேரோட்டம் நடக்கும் இந்த ரோட்டில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன.
கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் துவங்கியது. நிறைவாக இன்று(அக்.28) காலை சட்ட தேரோட்டம் நடக்கிறது. சஷ்டி பக்தர்கள் 6 நாட்களாக இருவேளை கிரிவலம் செல்கின்றனர். திருவிழாவிற்கு முன்பாகவே ரோடு சீரமைக்கப்பட்டு இருந்தால் பக்தர்கள் அவதியடைந்திருக்க மாட்டார்கள்.
தேரோட்டம் இன்று நடக்கும் நிலையில் நேற்று அவசர கதியில் கிரிவல ரோட்டை மாநகராட்சி சீரமைத்தது. சீரமைக்கப்பட்ட பகுதிகள் இன்று காலைக்குள் காய்வது சந்தேகமே.

