/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.4 கோடிக்கு ஆடுகள் திருமங்கலத்தில் விற்பனை
/
ரூ.4 கோடிக்கு ஆடுகள் திருமங்கலத்தில் விற்பனை
ADDED : மார் 29, 2025 02:58 AM
திருமங்கலம் : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி ஆட்டுச் சந்தையில் ரூ. 4 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின.
ரம்ஜான் பண்டிகை வருகிற மார்ச் 31-ல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய ஆட்டுச் சந்தையான திருமங்கலம் நகராட்சி ஆட்டுச் சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலநுாறு வியாபாரிகள் வந்து செல்வர்.
நேற்று நடந்த ஆட்டுச் சந்தையில் அதிகாலை 3:00 மணி முதலே கூட்டம் களைகட்டியது. ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் ஆடுகளின் விலை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்றது. கடந்தாண்டை விட ஆடுகளின் விலை அதிகரித்து இருந்ததால் விற்பனை மந்தமாக இருந்த நிலையிலும் ரூ. 4 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்தது.