/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொன்விழா சிறப்பு மலர் பள்ளியில் வெளியீடு
/
பொன்விழா சிறப்பு மலர் பள்ளியில் வெளியீடு
ADDED : நவ 19, 2025 05:17 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் சாரண சாரணிய இயக்கம் 1975 ல், துவங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பொன்விழா நிகழ்ச்சிகள் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் தயாளன் வரவேற்றார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ., க்கள் அய்யப்பன், பூமிநாதன், வெங்கடேசன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், உசிலம்பட்டி சப் கலெக்டர் உட்கர்ஷ்குமார், சாரண சாரணிய இயக்க மாவட்ட தலைவர் ஜெகதீசன், செயலாளர் பரமசிவன், பொருளாளர் சூசைமாணிக்கம், சாரண ஆணையர் ஜான்கோயில்பிள்ளை, குருளையர் ஆணையர் மதன்பிரபு, தி.மு.க., மாவட்டச் செயலாளர் மணிமாறன், நகர், ஒன்றியச் செயலாளர்கள் பங்கேற்றனர். பொன்விழா மலரை வெளியிட்டு அமைச்சர் மகேஷ் பேசினார்.

