/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓட்டுச்சாவடியில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
/
ஓட்டுச்சாவடியில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
ஓட்டுச்சாவடியில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
ஓட்டுச்சாவடியில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
ADDED : நவ 19, 2025 05:16 AM
மதுரை: வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து வழங்க, சந்தேகங்களுக்கு தீர்வு காண ஓட்டுச்சாவடி மையங்களில் நாளை வரை சிறப்பு திருத்தப் பணிகள் நடக்கிறது.
மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள 2752 ஓட்டுச்சாவடி மையங்களுக்குட்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கீட்டுப் படிவங்கள் நவ.4 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது அப்படிவங்களை பூர்த்தி செய்து மீண்டும் பெறும் பணிகள் டிச.4 வரை நடக்க உள்ளது. இதில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவதை எளிமைப்படுத்த நவ.18, 19, 20 ஆகிய 3 நாட்கள் ஓட்டுச் சாவடி மையங்களில் சிறப்பு தீவிர திருத்தப்பணி காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இம்மையங்களில் பூர்த்தி செய்த படிவங்களை வழங்கலாம்.
படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகங்களை களைய தேர்தல் பணி அலுவலர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

