/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே
/
எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே
ADDED : பிப் 20, 2025 05:41 AM

மாநில அரசின் கடமை
சஞ்சய்
இன்றைய நிலைமையில், சென்னையை தாண்டினால் தமிழ் மொழி பயன்பாடு குறைந்துவிடும். ஆங்கிலம் அல்லது ஹிந்தி தேவை என்பது தான் எதார்த்த நிலவரம். அரசியல்வாதிகள் குழந்தைகள் ஆரம்ப வகுப்பில் இருந்தே ஹிந்தியை கற்கின்றனர். ஆனால் ஏழ்மை நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வேண்டாம் என கொடி பிடிக்கின்றனர். ஹிந்தி கற்பதால் பிற மாநிலங்களில் தொழில் துவங்கி சாதிக்க கூட பயன் படுமே. மாணவ பருவத்தில் தான் கற்றுக்கொள்ள முடியும். மாணவர்கள் என்ன படித்து அறிவை வளர்த்துக்கொள்ள ஆசைப்படுகின்றரோ அதை நிறைவேற்றித்தரும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. சி.பி.எஸ்.இ., மாணவரான நான் பெறும் மொழி அறிவு, மாநில கல்வி திட்ட மாணவர்களும் பெறவேண்டும்.