/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குறவன்குளத்தை மறந்த அரசு பஸ் பொதுமக்கள் அவதி
/
குறவன்குளத்தை மறந்த அரசு பஸ் பொதுமக்கள் அவதி
ADDED : நவ 20, 2025 06:01 AM

அலங்காநல்லுார்: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து குறவன்குளத்திற்கு வந்த அரசு பஸ்கள் 2 மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படாததால் கிராம மக்கள் பாதித்துள்ளனர்.
இக்கிராமத்திற்கு தினமும் நான்கு முறை பஸ்கள் வந்து சென்றன. கொரோனாவுக்குப் பின் கிராமத்திற்கு தொடர்ந்து பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதுபற்றி புகார் அளித்தால் ஓரிரு நாட்கள் வந்து செல்கின்றன. பின்னர் வராமல் நின்றுவிடுவதுண்டு. அலங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட், ஊர்சேரி பிரிவு என நினைத்த இடத்தில் பயணிகளை இறக்கி விட்டு பஸ்கள் திரும்பி விடுகின்றன.
பயணி ரவிச்சந்திரன் கூறுகையில், ''பஸ்கள் முறையாக வராததால் கிராம மக்கள் அரசு பஸ்சை எதிர்பார்ப்பதில்லை. ஷேர் ஆட்டோக்களில் செல்கின்றனர். இங்கிருந்து காலையில் மட்டும் 80 பேர் பயணிக்கின்றனர். மதுரை கடைகளில் வேலை முடித்து இரவு வரவழியில்லை. முன்பு அதே பஸ்சில் இரவில் பரவை மார்க்கெட் செல்வோரு ம் தற்போது சிரமப்படுகின்றனர். ஓராண்டுக்கு மேலாக மாலை, இரவு பஸ்கள் வரவில்லை. இருமாதங்களாக காலை, மதிய பஸ்களும் வரவில்லை. பொதுமக்கள் கவலையை போக்க கலெக் டர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

