/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காந்தி மியூசியத்தில் தியாகிகள் ஸ்துாபி
/
காந்தி மியூசியத்தில் தியாகிகள் ஸ்துாபி
ADDED : நவ 20, 2025 06:02 AM
மதுரை: மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைவதையொட்டி தமுக்கம் சந்திப்பில் 1962ல் நிறுவப்பட்ட தியாகிகள் ஸ்துாபி அகற்றப்பட்டு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை காந்தி மியூசியத்தில் நிறுவலாம் என தியாகிகள் சமிதி அமைப்பினர் தெரிவித்தனர்.
கலெக்டர் பிரவீன் குமாரிடம் கேட்டபோது, ''அரசு உத்தரவுப்படி கலெக்டர், மாநகராட்சி, போலீஸ் கமிஷனர்கள் அடங்கிய குழு மூலம் இடம் தேர்வு செய்யப்படும். தலைவர்களின் சிலைகள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை நிறுவுவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். காந்தி மியூசியத்தில் ஸ்துாபியை நிறுவ இடம் தருவதாக அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வமாக கடிதம் பெற்றபின் பரிசீலித்து முடிவு செய்யப்படும்'' என்றார்.

