/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசுப் பணியாளர் குறைதீர் கூட்டம்; கலெக்டர் நடத்த வலியுறுத்தல்
/
அரசுப் பணியாளர் குறைதீர் கூட்டம்; கலெக்டர் நடத்த வலியுறுத்தல்
அரசுப் பணியாளர் குறைதீர் கூட்டம்; கலெக்டர் நடத்த வலியுறுத்தல்
அரசுப் பணியாளர் குறைதீர் கூட்டம்; கலெக்டர் நடத்த வலியுறுத்தல்
ADDED : ஆக 06, 2025 01:13 AM
மதுரை; 'அரசுப் பணியாளர்களுக்கு கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்' என, அரசுப் பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் தலைவர் ஜெயகணேஷ் தலைமையில் மதுரையில் நடந்தது. செயலாளர் முத்துராஜா, பொருளாளர் சேகர், நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், கமலேஷ், செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பணிநெருக்கடியால் கலெக்டரை சந்திக்க முடியாமல் உள்ளது. எனவே அரசு பணியாளர் குறைகளை களைந்திட மாதம் ஒருமுறை பணியாளர் குறைதீர் கூட்டத்தை கலெக்டர் நடத்த வேண்டும். வருவாய்த் துறையில் இந்தாண்டுக்கான முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு பட்டியல் வெளியிடுவதுடன், அனைத்து வி.ஏ.ஓ.,க்களுக்குமான பணிமூப்பு பட்டியலை வெளியிட வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களின் பணிமதிப்பீட்டு சான்றிதழில் உயரதிகாரிகளின் கையெழுத்தைப் பெற்றால்தான் ஊதியம் வழங்கப்படும் என்ற நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும். அரசு துறைகளில் பாலியல் அத்துமீறல்களை கண்காணிக்கும் விசாகா கமிட்டி, அரசியல் தலையீடு இன்றி பொது கலந்தாய்வு மூலம் மட்டுமே பணியிட மாறுதல் வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலர்களை உடனே மாறுதல் செய்ய வேண்டும்.
விடுமுறை நாளிலும் பணிசெய்ய கட்டாயப்படுத்தாமல், பணிநேரத்தில் மட்டுமே பணி வழங்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்து துறை பணியாளர்களின் பணிவரன்முறை, தகுதிக்காண் பருவம் நிறைவு, தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதிய உயர்வு, 17ஏ, 17 பி யின் கீழ் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை கோப்புகளின் மீது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

