/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'ஹைரிஸ்க்' பெண்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தியதில் பரிசோதனை வெற்றி! அரசு மருத்துவமனை மகப்பேறு டாக்டர்கள் விழிப்புணர்வு
/
'ஹைரிஸ்க்' பெண்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தியதில் பரிசோதனை வெற்றி! அரசு மருத்துவமனை மகப்பேறு டாக்டர்கள் விழிப்புணர்வு
'ஹைரிஸ்க்' பெண்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தியதில் பரிசோதனை வெற்றி! அரசு மருத்துவமனை மகப்பேறு டாக்டர்கள் விழிப்புணர்வு
'ஹைரிஸ்க்' பெண்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தியதில் பரிசோதனை வெற்றி! அரசு மருத்துவமனை மகப்பேறு டாக்டர்கள் விழிப்புணர்வு
UPDATED : மார் 03, 2026 09:03 AM
ADDED : மார் 03, 2026 05:54 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் 15 நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கருத்தடை ஊசிக்கு பெண்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.
ஒருமுறை கருத்தடை ஊசி செலுத்தினால் மூன்றாண்டுகள் வரை கருத்தரிப்பதை தடை செய்யும் (இம்ப்ளானன் என்.எக்ஸ்.டி) தோல் ஊசி மதுரை அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மருத்துவமனையில் மாதம் 1000 முதல் 1200 பிரசவம் நடக்கிறது. முதல் குழந்தை பெற்ற பெண்களுக்கு அடுத்த குழந்தை உடனடியாக கருத்தரிக்கக்கூடாது என்பதற்காக 'டிஸ்சார்ஜ்' ஆகும் போது 'காப்பர் டி' கருத்தடை சாதனம் பொருத்தப்படுகிறது. இரண்டு குழந்தை பெற்ற பெண்களுக்கு உடனடியாக குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் காப்பர் டி பொருத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக புதிய தடுப்பூசி கொண்டு வரப்பட்டது.
ரீபில் போன்ற சிறிய பிளாஸ்டிக் டியூப்பில் மருந்து வைக்கப்பட்டு இடது தோளின் கீழ்ப்பகுதி தோலில் பொருத்தப்படுகிறது. இதிலிருந்து விடுவிக்கப்படும் மருந்தானது மூன்றாண்டுகள் வரை கர்ப்பம் தரிக்காமல் தடை செய்யும். இதற்கு பெண்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
மகப்பேறு துறைத்தலைவர் டாக்டர் காயத்ரி கூறியதாவது: காப்பர் டி பொருத்தினாலும் அதிலுள்ள நுால் மூலம் தொற்று பரவ வாய்ப்புள்ளது. கருக்குழாயில் கருத்தரிக்கும் வாய்ப்பை இந்த சாதனம் தடுக்காது. மேலும் மாதந்தோறும் இந்த சாதனம் சரியான நிலையில் உள்ளதா என்பதை டாக்டர் பரிசோதித்து கண்காணிக்க வேண்டும். இதனால் பெண்களுக்கு பல விதத்திலும் அசவுகரியம். மகப்பேறு வார்டில் குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்த தடுப்பூசி குறித்து கவுன்சிலிங் செய்கிறோம். இதனால் தினமும் 2 முதல் 4 பெண்கள் வரை கருத்தடை ஊசி செலுத்துவதற்கு வருகின்றனர். இதயநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்துகிறோம். இது அவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கால் சோர்வடைவது தடுக்கப்படுவதால் இதய பாதிப்பு குறைகிறது. கருக்குழாயில் கருத்தரிப்பதையும் இம்மருந்து தடைசெய்யும். மீண்டும் மருத்துவமனை வந்து பரிசோதிக்க வேண்டியதில்லை.
சுகப்பிரசவம், அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்ற பெண்களுக்கும் பயன்படுத்துகிறோம். பிரசவமாகி வீடு சென்று ஒருமாதம் கழித்தும் தடுப்பூசி செலுத்த வரலாம். இளம் வயதினரும் மெனோபாஸ்க்கு முந்தைய நிலையில் உள்ள பெண்களும் இத்தடுப்பூசியை பயன்படுத்தலாம். பெண்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளதால் கூடுதல் ஊசிகள் கேட்டுள்ளோம் என்றார்.

