/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தவிக்க விடும் அரசு பஸ்கள்; தினமும் நடக்குது தகராறு
/
தவிக்க விடும் அரசு பஸ்கள்; தினமும் நடக்குது தகராறு
தவிக்க விடும் அரசு பஸ்கள்; தினமும் நடக்குது தகராறு
தவிக்க விடும் அரசு பஸ்கள்; தினமும் நடக்குது தகராறு
ADDED : மார் 18, 2024 07:17 AM
பேரையூர் : பேரையூர் பஸ் ஸ்டாண்டுக்குள் பகல் நேரம் வந்து செல்லும் அரசு பஸ்கள் இரவு நேரத்தில் வராமல் பயணிகளை பரிதவிக்கவிட்டு செல்வதால், ஓட்டுனர்கள், பயணிகளிடையே தினமும் தகராறு ஏற்படுகிறது.
தேனியில் இருந்து ராஜபாளையம், செங்கோட்டை, நாகர்கோவில், மார்த்தாண்டம் செல்லும் அரசு பஸ்கள், அப்பகுதியில் இருந்து தேனி, கம்பம், குமுளி பகுதிக்கு செல்லும் பஸ்கள் பேரையூர் பஸ் ஸ்டாண்டுக்குள் பகல் நேரத்தில் வந்து செல்கின்றன.
இரவு 10: 00 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் ஒரு கி.மீ., முன்னதாகவே முக்குச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கின்றன. இதனால் பயணிகளுக்கும் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. ஆனாலும் டிரைவர், கண்டக்டர்கள் கண்டு கொள்ளாமல் சென்று விடுவதால் குடும்பத்துடன் பயணிப்போரும் இரவில் சிரமப்படுகின்றனர். ஊருக்குள் வர வாகனங்கள் கிடைக்காமல் குழந்தைகள் சகிதமாக நடந்தே வருகின்றனர். அப்போது நாய்கள் விரட்டுவதால் அச்சப்படுகின்றனர். அதிகாரிகள் இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

