/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சம்பள உயர்வு இல்லாமல் கிரேடு 3 லேப்டெக்னீசியன்கள் தவிப்பு
/
சம்பள உயர்வு இல்லாமல் கிரேடு 3 லேப்டெக்னீசியன்கள் தவிப்பு
சம்பள உயர்வு இல்லாமல் கிரேடு 3 லேப்டெக்னீசியன்கள் தவிப்பு
சம்பள உயர்வு இல்லாமல் கிரேடு 3 லேப்டெக்னீசியன்கள் தவிப்பு
ADDED : நவ 05, 2025 01:08 AM
மதுரை: மருத்துவ தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.,) மூலம் கிரேடு 3 லேப் டெக்னீசியன் பணியிடத்திற்கு மாதம் ரூ.13 ஆயிரம் ஊதியத்தில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஐந்தாண்டுகளாக சம்பளம் உயர்த்தவில்லை, பணியையும் நிரந்தரப்படுத்தவில்லை.
பொது சுகாதார இயக்ககத்தின் கீழ் 2800 பேர் லேப் டெக்னீசியன்களாக உள்ளனர்.
1900 பேர் நிரந்தரப் பணியிடத்திலும் மீதியுள்ளோர் தொகுப்பூதியத்திலும் உள்ளனர். அனைவரும் பிளஸ் 2 முடித்து ஓராண்டு டிப்ளமோ மெடிக்கல் லேப் டெக்னீசியன் முடித்து எம்.ஆர்.பி., மூலம் மதிப்பெண், இனச் சுழற்சி அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டனர்.
மாத தொகுப்பூதியம் ரூ.13 ஆயிரம் வீதம் இரண்டாண்டுகள் பணிபுரிந்த பின் பணி நிரந்தரம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஐந்தாண்டுகளாகியும் எந்த மாற்றமும் இல்லை என்கின்றனர் தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்க மாநில நிர்வாகிகள் சிவபாலகிருஷ்ணன், முருகானந்தம், பாலகிருஷ்ணன். அவர்கள் கூறியதாவது:
பொது சுகாதார இயக்கத்தின் கீழ் நகர்ப்புற, கிராமப்புற சுகாதார நிலையங்களில் தான் பணியில் உள்ளனர். நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், கர்ப்பிணிப் பெண், சர்க்கரை நோய், தொற்றா நோய் என அனைத்து திட்டங்களுக்கும் முகாமிற்கு செல்ல வேண்டும். வாரத்தில் 2 நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் வேலையையும் சேர்த்து செய்கின்றனர். இவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.13ஆயிரம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் தனியார் நிறுவனம் மூலம் பணிபுரியும் ஒப்பந்தமுறை மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.14ஆயிரம் வரை வழங்கப் படுகிறது.
மாறாத ஊதியம் ஐந்தாண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட 115 பேருக்கு இதுவரை ஊதிய உயர்வு வழங்கவில்லை. மேலும் 2024 ம் ஆண்டில் 350 பேர் வேலைக்கு சேர்க்கப்பட்டனர்.
ஐந்தாண்டுகளுக்கு முன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லுாரிகளில் சேர்க்கப்பட்ட 450 பேருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இவர்களும் ஐந்தாண்டு அனுபவம் பெற்ற நிலையிலும் சம்பளம் உயர்த்தவில்லை.
அனைவரையும் பணி நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்திற்கான அரசாணை வெளியிடுவதற்கு முன்பாக தொகுப்பூதிய சம்பளத்தை இருமடங்காக அதிகரித்து வழங்க வேண்டும் என்றனர்.

