ADDED : நவ 05, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் விளையும் மருத்துவ குணம் கொண்ட அதலைக்காய் கிலோ ரூ.250க்கு விற்கப்படுகிறது.
இப்பகுதி கரிசால்மண் நிறைந்தது. வானம் பார்த்த பூமி என்பதால் பருத்தி, பாசி, உளுந்து, மக்காச்சோளம், சோளம், எள் உள்ளிட்ட பயிர்களுடன் அதலைகாயும் அதிகளவில் விளைகிறது. பூமிக்குள் கிழங்கு வடிவில் இருக்கும் இவை, மழைக்காலம் துவங்கியதும் கொடியாக படரத் துவங்கிவிடும். செடிக்கு 50 காய்கள் வரை பறிக்கலாம்.
பாகற்காய் போன்று கசப்பு தன்மை கொண்ட இந்த காயை சர்க்கரை நோயாளிகள் விருப்ப உணவாக பயன்படுத்துகின்றனர். செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சீசன் உள்ள, இந்தக் காய் தற்போது கிலோ ரூ.250க்கு விற்கப்படுகிறது.

