/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி ரோடுகளின் தரம்: கண்காணிப்பு குழு ஆய்வு
/
மாநகராட்சி ரோடுகளின் தரம்: கண்காணிப்பு குழு ஆய்வு
ADDED : நவ 05, 2025 01:09 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் முடிவுற்ற, நடக்கும் ரோடுகள் தரம் குறித்து மாநில கண்காணிப்புக் குழு அதிகாரிகள் 2 நாட்களாக ஆய்வு செய்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு அடிப்படையில் சென்னை தாம்பரம், மதுரை, கோவை மாநகராட்சிகளில் முடிந்த, தற்போது நடக்கும் தார், பேவர் பிளாக், சிமென்ட் ரோடுகளின் தரத்தை சிறப்பு கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
இதன்பேரில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலர் உத்தரவுபடி ஓய்வு பொறியாளர்கள் ஆறுமுகம் (நெடுஞ்சாலைத்துறை), மணிமாறன் (ஊரக வளர்ச்சி), தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவன கூடுதல் துணைப் பொது மேலாளர் சிவக்குமார், குழுத் தலைவர் மோகன்குமார் அடங்கிய குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் ரூ. பல கோடி மதிப்பில் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய ரோடு பணியும் நடக்கிறது.
இதில் மண்டலம் வாரியாக ரோடுகள் தேர்வு செய்யப்பட்ட அவற்றின் நீளம், அகலம், ஆழம், தரம் உள்ளிட்டவை அளவீடு செய்யப்பட்டது.
கமிஷனர் சித்ரா உத்தரவுபடி மதுரை மாநகராட்சி பொறியாளர்கள், குழுவிற்கு தேவையான உதவிகளை செய்தனர்.
இக்குழு ஆய்வு குறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றனர்.

