ADDED : பிப் 22, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 5 திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சொத்துவரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, ரோடு,தெருவிளக்கு, சுகாதார வசதி, ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்தும் 81 மனுக்கள் பெறப்பட்டன. சென்ற முகாமில் பெறப்பட்ட 37 மனுக்களுக்குநடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து நிலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நல விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் பரிசுவழங்கினார்.
துணைமேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, துணை கமிஷனர்கள் தயாநிதி, சரவணன், நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி கமிஷனர் சுரேஷ்குமார், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி பங்கேற்றனர்.