ADDED : செப் 19, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்:திருவேடகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
திருவேடகம், மேலக்கால், காடுபட்டி, தென்கரை ஊராட்சி பகுதியினரிடம் மனுக்கள் பெறப்பட்டன. 15 துறைகள் சார்ந்த 46 சேவைகள் வழங்கப்பட்டன. தாசில்தார்கள் ராமச்சந்திரன், பார்த்திபன், மண்டல துணைத் தாசில்தார் செந்தில்குமார், பி.டி.ஓ.,க்கள் லட்சுமிகாந்தம், கிருஷ்ணவேணி மேற்பார்வையில் முகாம் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், மாவட்ட பிரதிநிதி ராஜாராம், சோழவந்தான் நகர் செயலாளர் சத்யபிரகாஷ், சேர்மன் ஜெயராமன், இளைஞரணி வெற்றிச்செல்வன், பால்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.