நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர், : பேரையூர் பகுதியில் விநாயகர் சிலைகள் அமைப்பது மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கான விழிப்புணர்வு கூட்டம் பேரையூரில் நடந்தது. இதில் உசிலம்பட்டி சப் கலெக்டர் உட்கர்ஷ்குமார், பேரையூர் ஏ. எஸ்.பி., அஸ்வினி தலைமை வகித்தனர். தாசில்தார் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார்.
அவர்கள் கூறியதாவது: சதுர்த்தி விழா முடிந்து நீரில் சிலையை கரைக்கச் செல்லும் போது மட்டுமே ஊர்வலம் நடத்த வேண்டும். தகர செட்டில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும். விழாவில் ஒலிபெருக்கி அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்றனர்.