
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனி தமிழ்நாடு பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்) கிளை சார்பில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஹயக்கிரீவர் ேஹாமம், தட்சிணாமூர்த்தி ேஹாமம் நடந்தது.
அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
அனவைருக்கும் பிரசாதமாக பூஜிக்கப்பட்ட கல்விப் பொருட்கள் வழங்கப்பட்டன. கிளைத் தலைவர் சசிராமன், பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார், பொருளாளர் ராஜன், இளைஞரணி செயலாளர் கிேஷார்குமார், மகளிர் அணி உமாமகேஸ்வரி, துணைத் தலைவர்கள் சீனிவாசன், ராமச்சந்திரன், ஆலோசகர் ராமசுவாமி, மதுரை மாவட்ட தலைவி ஜெயஸ்ரீ, பொதுச்செயலாளர் சுந்தரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

