/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறை உரிமம் ரத்து செய்ததற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : அக் 10, 2024 06:25 AM
மதுரை : மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறைகளின் உரிமத்தை ரத்து செய்து, இலவசமாக மாற்றியதை எதிர்த்து தாக்கலான வழக்கில் ஏலதாரர்களுக்கு உரிம டெபாசிட் தொகையை திரும்ப வழங்க மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை விஜயராகவன் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மனு:
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் கட்டண கழிப்பறைகளை மாநகராட்சியின் ஏல உரிமம் மூலம் சில ஆண்டுகளாக நடத்தினோம். ஏல உரிமத்தை செப்.,1 முதல் நவ.30 வரை மாநகராட்சி நிர்வாகம் நீட்டித்தது. அதற்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்தினோம்.
திடீரென உரிமத்தை ரத்து செய்து கழிப்பறைகளின் சாவிகளை ஒப்படைக்குமாறு மாநகராட்சி கமிஷனர் அக்.4 ல் உத்தரவிட்டார். அவற்றை இலவச பொதுக் கழிப்பறைகளாக மாற்றியுள்ளனர். எங்களின் வாழ்வதாரம் பாதித்துள்ளது. உரிமத்தை ரத்து செய்தது சட்டவிரோதம். அந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி எம்.ஜோதிராமன் விசாரித்தார்.
மாநகராட்சி தரப்பு: இவை தற்போது இலவச கழிப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. மனுதாரர்கள் செலுத்திய உரிம டெபாசிட் தொகை அவர்கள் வசம் கழிப்பறைகள் இருந்த நாட்களை கழித்துக் கொண்டு மீதி நாட்களுக்குரிய தொகை திரும்ப வழங்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: விதிகள்படி டெபாசிட் தொகையை கணக்கீடு செய்து மனுதாரர்களுக்கு அக்.15 க்குள் மாநகராட்சி நிர்வாகம் திரும்ப வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.