UPDATED : நவ 09, 2026 04:57 PM
ADDED : நவ 09, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி நண்பர்கள் வட்டாரம் சார்பில் ஆதரவற்றோர், ஏழை, எளியோருக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.
கல்லுப்பட்டியில் உள்ள அன்பாலயா பவுண்டேஷன் இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோருக்கு தீபாவளி கொண்டாட ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புத்தாடைகள், இனிப்புகளை வழங்கினர். அமைப்பின் தலைவர் பாஸ்கரன், செயலாளர் விஜயபார்த்திபன், சென்னை முனுசாமி ராஜாங்கம், சொக்கம்மா பங்கேற்றனர்.
