/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தென்காசி, வாசுதேவநல்லுாரை பொது தொகுதிகளாக மாற்ற வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ADDED : ஆக 16, 2025 03:31 AM
மதுரை: தென்காசி லோக்சபா தொகுதி, வாசுதேவநல்லுார் சட்டசபை தொகுதியை பொது தொகுதிகளாக மாற்ற உத்தரவிட தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
கடை யநல்லுார் சந்திரமோகன் தாக்கல் செய்த பொதுநல மனு: தென்காசி லோக்சபா தொகுதி, வாசுதேவநல்லுார் சட்டசபை தொகுதியில் அனைத்து சமூகத்தினரும் வேட்பாளராக போட்டியிட வழிவகை செய்ய வேண்டும். இதற்காக அவற்றை பொது தொகுதிகளாக மாற்ற வலியுறுத்தி மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை செயலர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை செயலர், இந்திய தேர்தல் கமிஷன், திருநெல்வேலி கலெக்டருக்கு 2020 ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜாராமன், தமிழக அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுவில் கோரிய நிவாரணம், உயர்நீதிமன்றத்திற்குரிய நீதித்துறை மறுஆய்வு அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. இதற்கு இந்திய தேர்தல் கமிஷன் மட்டுமே தீர்வு காண வேண்டும். பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு விரிவான விவாதம் தேவை. மனுதாரர் சட்டத்திற்குட்பட்டு தீர்வை தேடலாம். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டனர்.