/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடும்பம், மரியாதை பெயரில் துன்புறுத்தல்; மறைந்திருக்கும் முகமூடியை அகற்ற வேண்டும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
/
குடும்பம், மரியாதை பெயரில் துன்புறுத்தல்; மறைந்திருக்கும் முகமூடியை அகற்ற வேண்டும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
குடும்பம், மரியாதை பெயரில் துன்புறுத்தல்; மறைந்திருக்கும் முகமூடியை அகற்ற வேண்டும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
குடும்பம், மரியாதை பெயரில் துன்புறுத்தல்; மறைந்திருக்கும் முகமூடியை அகற்ற வேண்டும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
ADDED : நவ 05, 2025 12:49 AM
மதுரை: குடும்பம், மரியாதை என்ற பெயரில் துன்புறுத்தல் மறைந்திருக்கும் போது அம்முகமூடியை சட்டம் அகற்ற வேண்டும் என அறிவுறுத்திய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனைவியை துன்புறுத்திய கணவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் துன்புறுத்துவதாக சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்நீதிமன்றம் கணவருக்கு 6 மாதம் சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்தது. இதை எதிர்த்து கணவர் மற்றொரு கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேரடி சாட்சி இல்லையெனக்கூறி அந்நீதிமன்றம் கணவரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து அப்பெண் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு:
அடக்குமுறை அல்லது துன்பத்தை அமைதியாக பொறுத்துக் கொள்வதில் திருமணத்தின் புனிதம் இல்லை. அந்த உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம் மரியாதை, நட்பு மற்றும் கருணையில்தான் உள்ளது. இவ்வழக்கில் வயது முதிர்ந்த பெண் குடும்ப மரியாதை, திருமண புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் அவமதிப்பு, புறக்கணிப்பை எதிர்கொண்டுள்ளார். உடல், மன ரீதியான துன்புறுத்தல்களை சகித்துக் கொள்ளும் தலைமுறையைச் சேர்ந்த இந்திய பெண்களின் பிரதிநிதி மனுதாரர். இதை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
வயதான கணவரை தண்டிக்க வேண்டும் என மனைவி கோருவது பழிவாங்கும் செயல் அல்ல. மனைவியை தனிமைப்படுத்தி, உணவு, மரியாதையை பறித்துவிட்டால், அது துன்புறுத்தல் எனும் வரம்பை தாண்டி விடுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் நேரடி சாட்சி வேண்டும் என கூறுவது சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும். கணவர் முதியவர் என்பதற்காக தண்டனையில் சலுகை கோருவது ஏற்புடையதல்ல. முதியவருக்கு அதிக பொறுப்பு உண்டு. குடும்பம், மரியாதை என்ற பெயரில் துன்புறுத்தல் மறைந்திருக்கும் போது அம்முகமூடியை சட்டம் அகற்ற வேண்டும்.
கணவரின் வயது முதிர்வின் காரணமாக அவர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அவரது துன்புறுத்தல்கள் மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
கணவரை விடுதலை செய்த நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கணவருக்கு 6 மாதம் சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. மீதமுள்ள தண்டனை காலத்தை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

