/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாடிப்பட்டியில் பி.எப்., விழிப்புணர்வு கூட்டம்
/
வாடிப்பட்டியில் பி.எப்., விழிப்புணர்வு கூட்டம்
ADDED : நவ 05, 2025 12:46 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) நிறுவனம் சார்பில் பிரதம மந்திரி விக்சித் பாரத் திட்ட (வளர்ச்சியடைந்த பாரதத்தின் வேலைவாய்ப்பு திட்டம்) விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பி.எப்., அமலாக்க பிரிவு அதிகாரி மனோகரன் தலைமை வகித்தார். வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் குறித்தும், அதை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்தும், ஜவுளி பூங்கா தொழிற்சாலை நிறுவன பிரதிநிதிகளுக்கு விளக்கினார்.
புதிய தொழில் முனைவோர் தங்கள் பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்குவதற்கு வருங்கால வைப்பு நிதி எவ்வாறு உதவுகிறது என்பதையும், ஒருவர் புதிதாக வேலைக்கு செல்லும் நிறுவனம், வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும் என்று பேசினார்.
அமலாக்க துறை அதிகாரிகள் ரமண கேசரா, அண்ணாதுரை, ஹேமமாலினி, செந்தில்குமார் பங்கேற்றனர்.

