/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பூங்காவில் ரேஷன் கடை கட்டுமானம் நிறுத்தம்: உயர்நீதிமன்றத்தில் தகவல்
/
பூங்காவில் ரேஷன் கடை கட்டுமானம் நிறுத்தம்: உயர்நீதிமன்றத்தில் தகவல்
பூங்காவில் ரேஷன் கடை கட்டுமானம் நிறுத்தம்: உயர்நீதிமன்றத்தில் தகவல்
பூங்காவில் ரேஷன் கடை கட்டுமானம் நிறுத்தம்: உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : நவ 05, 2025 01:09 AM
மதுரை: புதுக்கோட்டை மாநகராட்சி எழில் நகரில் பூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் ரேஷன் கடை கட்டுமானத்திற்கு தடை கோரிய வழக்கில், பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: புதுக்கோட்டை எழில் நகரில் சிறுவர் பூங்காவிற்கு இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரேஷன் கடை கட்டுமான பணி துவங்கியுள்ளது. பொது பயன்பாட்டிற்குரிய இடத்தில் விதிகளை மீறி கட்டுமானம் மேற்கொள்ளக்கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆட்சேபம் தெரிவித்தோம். கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டும். இடத்தை பூங்காவாக பராமரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப் பிட்டார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜரானார்.
அரசு தரப்பு: பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் எந்த பணியும் மேற்கொள்ளக்கூடாது என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீதிபதிகள்: பொது பயன்பாட்டிற்கு இடம் ஒதுக்கியதை, அதே நோக்கத்திற்கு அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் நோக்கம் நிறைவேறாது. இப்படி ஒவ்வொரு இடமாக ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொள்வது ஏற்புடையதல்ல.
இப்பிரச்னையில் ஏதாவது ஒரு உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டால்தான் இப்படி ஆக்கிரமிப்பது குறையும். முன்பு நத்தம் நிலத்தில் மட்டுமே வீடுகள் கட்டப்படும். பின் அதிகாரிகள் வருவாயை பெருக்க நிலத்தை வகை மாற்றம் செய்து, கண்டபடி வீடுகள் கட்ட அனுமதிக்கின்றனர். ஏதாவது 2 அதிகாரிகளை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தால்தான் சரியாக இருக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.
அரசு தரப்பின் பதிலை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை பைசல் செய்தனர்.

