/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊராட்சிகளில் முறைகேடு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
/
ஊராட்சிகளில் முறைகேடு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 01, 2025 12:56 AM
மதுரை: இரு ஊராட்சிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி தாமஸ் சேவியர் தாக்கல் செய்த மனுவில், 'பாளையம்பட்டி ஊராட்சியில் நடந்த நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த 2022ல் கலெக்டருக்கு மனு அனுப்பினேன். விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு, 'மனுதாரருக்கு விசாரணையில் போதிய வாய்ப்பு வழங்கி, மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் சட்டத்திற்குட்பட்டு கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது
தென்காசி மாவட்டம் மாரிச்சாமி தாக்கல் செய்த மனுவில், 'நாரணபுரம் ஊராட்சி தலைவர் மாரியம்மாள், நிதியை தவறாக பயன்படுத்தினார். கலெக்டருக்கு 2024ல் புகார் அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டார்.
நீதிபதிகள், 'சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விசாரணையில் போதிய வாய்ப்பளிக்க வேண்டும். மனுதாரரின் மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.