sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பட்டியலினத்தவருக்கு நிதி முனையம் துவக்க வழக்கு விபரம் கோரும் உயர்நீதிமன்றம்

/

 பட்டியலினத்தவருக்கு நிதி முனையம் துவக்க வழக்கு விபரம் கோரும் உயர்நீதிமன்றம்

 பட்டியலினத்தவருக்கு நிதி முனையம் துவக்க வழக்கு விபரம் கோரும் உயர்நீதிமன்றம்

 பட்டியலினத்தவருக்கு நிதி முனையம் துவக்க வழக்கு விபரம் கோரும் உயர்நீதிமன்றம்


ADDED : மார் 11, 2026 06:26 AM

Google News

ADDED : மார் 11, 2026 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பட்டியலினத்தவருக்காக மாநில நிதி முனையம் துவக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளிடம் அதன் தரப்பு வழக்கறிஞர்கள் விபரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: பட்டியலின மக்களுக்காக மத்திய அரசு பெரும் நிதியை ஒதுக்குகிறது. அதை மாநில அளவில் பட்டுவாடா செய்ய சரியான முறையில் வங்கிசாரா நிதி நிறுவனம் போன்ற கட்டமைப்பு இல்லை. இதனால் நிதி முழுமையாக செலவிடப்படாமல் மீண்டும் மத்திய அரசுக்கே அனுப்பப்படுகிறது. பட்டியலின தொழில் முனைவோர் கடன் கோரினால் வங்கிகள் பிணையமில்லாத கடன் வழங்க தயங்குகின்றன. இதனால் அரசு வழங்கும் மானியம் பயனற்று போகிறது. இதற்கு தீர்வாக தமிழக அரசு மாநில நிதி முனையம் துவக்க வேண்டும். அதை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி பதிவு செய்ய வேண்டும்.

மத்திய அரசின் நிதியை நேரடியாக மாநில நிதி முனையத்திற்கு மாற்ற வேண்டும். அதன் மூலம் பயனாளிகளுக்கு நிதி சென்றடைவதை உறுதி செய்ய வலியுறுத்தி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, நிதித்துறை செயலர்கள், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு மத்திய, மாநில அரசுகளிடம் அதன் தரப்பு வழக்கறிஞர்கள் விபரம் பெற்று மார்ச் 30 ல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us