ADDED : ஆக 19, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் எச்.எம்.எஸ்., சங்க மாவட்டக்கிளை கூட்டம் நடந்தது.
தலைவர் அங்குசாமி தலைமை வகித்தார். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதை வரவேற்கிறோம். திட்டத்தில் சேருவதற்கான தேதியை செப்.15 வரை நீட்டிக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகையை கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் ஷாஜகான், ஒச்சாத்தேவன், சேதுராமன், சவுந்திரராஜன், சுந்தரராஜன் பங்கேற்றனர்.
