ADDED : செப் 19, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி கிராம மக்கள் சார்பில் மெய்காத்த அய்யனார் அம்மச்சி அம்மன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடந்தது.
முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மச்சி அம்மனுக்கு ஊர் மக்கள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது. 2 ம் நாள் நிகழ்ச்சியில் மந்தை திடலில் தயாரித்து வைத்திருந்த 15க்கும் மேற்பட்ட மண் குதிரைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டது. சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து ஆட்டுக்கிடாய் வெட்டி, பக்தர்களுக்கு கறி விருந்தளிக்கப்பட்டது.