/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜி.எஸ்.டி.,க்கு எதிரான கடையடைப்பில் ஓட்டல்கள் சங்கம் கலந்து கொள்ளாது
/
ஜி.எஸ்.டி.,க்கு எதிரான கடையடைப்பில் ஓட்டல்கள் சங்கம் கலந்து கொள்ளாது
ஜி.எஸ்.டி.,க்கு எதிரான கடையடைப்பில் ஓட்டல்கள் சங்கம் கலந்து கொள்ளாது
ஜி.எஸ்.டி.,க்கு எதிரான கடையடைப்பில் ஓட்டல்கள் சங்கம் கலந்து கொள்ளாது
ADDED : நவ 24, 2024 06:53 AM

மதுரை : ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்மானத்தை ரத்து செய்வதற்கு எதிராக வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நவ. 29 ல் நடத்தப்படும் கடையடைப்பு போராட்டத்தில் உணவகங்கள் கலந்து கொள்ளாது என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க துணைத் தலைவர் குமார் மதுரையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஜி.எஸ்.டி.,யில் ஏற்கனவே விதிக்கப்பட்ட வரியில் புதிய உயர்வு எதுவும் இல்லை. உணவங்களுக்கு வரி விலக்கு அளிப்பதற்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறோம். தற்போது கூடுதலாக வந்திருப்பது வாடகை கட்டடங்களுக்கான ஆர்.சி.எம்., வரி விதிப்பு முறை தான். இம்முறையின் கீழ் வரியை செலுத்தி விட்டு ஆர்.சி.எம்., முறையில் திரும்பப் பெறுவது சாத்தியம். இதனால் பெரிய பாதிப்பு இல்லை. இப்போது கடையடைப்பு நடத்துவதால் லாபமும் இல்லை. தேவைப்பட்டால் அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து கடையடைப்பு செய்ய வேண்டும். அதற்கு தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் தயாராக உள்ளது.
ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நவ. 29 ல் நடக்க உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தருகிறோம். ஆனால் உணவகங்களை மூடினால் வெளியூர் பயணிகள், அத்தியாவசிய உணவு தேவைப்படுவோர் பாதிக்கப்படுவர். அதனால் உணவகங்கள் கடையடைப்பில் கலந்து கொள்ள இயலாது. அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களின் முன்பாக கருப்புக்கொடி கட்டப்படும் என்றார்.