sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பிளஸ் 2 பொதுத்தேர்வுப் பணிகள் மதுரையில் பெற்றோர் போர்க்கொடி விசாரிக்கப்பட்டவர்களை விலக்கி வையுங்கள்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வுப் பணிகள் மதுரையில் பெற்றோர் போர்க்கொடி விசாரிக்கப்பட்டவர்களை விலக்கி வையுங்கள்

பிளஸ் 2 பொதுத்தேர்வுப் பணிகள் மதுரையில் பெற்றோர் போர்க்கொடி விசாரிக்கப்பட்டவர்களை விலக்கி வையுங்கள்

பிளஸ் 2 பொதுத்தேர்வுப் பணிகள் மதுரையில் பெற்றோர் போர்க்கொடி விசாரிக்கப்பட்டவர்களை விலக்கி வையுங்கள்


ADDED : பிப் 19, 2024 05:49 AM

Google News

ADDED : பிப் 19, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் பொதுத் தேர்வில் முறைகேடு புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்ட அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை இந்தாண்டு பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என பெற்றோர் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

மதுரையில் ஒரு தனியார் பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள் கடந்தாண்டு பொதுத் தேர்வில் கல்வி அலுவலர்கள் துணையுடன் அதிக மதிப்பெண் பெறும் வகையில் விடைத்தாள்களை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தற்போது கல்வித்துறையை சேர்ந்த இணை இயக்குநர் முதல் கீழ்நிலை அலுவலர்கள் வரை 30க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

நடவடிக்கையே இல்லை


விடைத்தாள்களை நுாதனமாக மாற்றி தேர்வுத்துறையை அதிர்ச்சியடைய வைத்த இந்த மதுரை முறைகேடு சம்பவம் தொடர்பாக பெயருக்கு கூட ஒரு அலுவலர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்காததும், அவர்கள் அதே கல்வி மாவட்டத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவதாலும், கல்வித்துறை மீது கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் துவங்க உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான பணி ஒதுக்கீடு துவங்கியுள்ளது.

இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், மதுரை முறைகேடு புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின் கூட ஒருவர் மீதும் இதுவரை நடவடிக்கை இல்லை. குறைந்தபட்சம் விசாரணைக்கு உட்பட்டவர்களில் சந்தேக நபர்கள் என கல்வித்துறை முடிவு செய்துள்ள சிலரைக்கூட வேறு மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யவில்லை. இந்தாண்டும் அவர்களில் பலருக்கு தேர்வுப் பணிகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தேர்வுத்துறை இயக்குநர் இதில் கவனம் செலுத்தி சந்தேகப்படும் கல்வி அலுவலர்களை தேர்வுப் பணியில் இருந்து விலக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us