/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகரிப்பு கேள்விக்குறியாகும் சுகாதாரம்
/
திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகரிப்பு கேள்விக்குறியாகும் சுகாதாரம்
திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகரிப்பு கேள்விக்குறியாகும் சுகாதாரம்
திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகரிப்பு கேள்விக்குறியாகும் சுகாதாரம்
ADDED : டிச 18, 2024 06:06 AM
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 72 ஊராட்சிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன.
இவற்றில் ஊரணி, கண்மாய் கரைகள், கருவேல மரங்கள் அடர்ந்துள்ள நத்தம் புறம்போக்கு நிலங்கள் போன்ற ஊரின் ஒதுக்குப்புறங்களை மக்கள் திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் செயல்படாத பராமரிப்பற்ற சுகாதார வளாகங்கள் தான்.
ஊராட்சி நிர்வாகங்கள் சுகாதார வளாகங்களை பராமரிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அதனால் கட்டடங்கள், அவற்றின் கதவுகள் சேதமடைந்து பாழாகி வருகின்றன. கழிவறை கோப்பைகள் சேதம் அடைந்து கிடக்கின்றன. மோட்டார்கள் மோசமாக சிதிலமடைந்துள்ளன.
இவ்வாறு சுகாதார வளாக பராமரிப்பின்மையே முதன்மை காரணமாக உள்ளது. கிராமப்புற மக்கள் திறந்த வழியை நாடுவதால், மத்திய அரசு செயல்படுத்திய துாய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது. அத்திட்டத்தை செயல்படுத்தும் போது கழிப்பறையை பயன்படுத்திய மக்கள், அதற்கு பின் பராமரிக்காமல் விட்டுவிட்டனர். அதனை அதிகாரிகளும் சரிவர ஆய்வு செய்யவில்லை.
அவற்றை முறையாக பயன்படுத்தி, மகளிர் குழுவினரின் நிர்வாகத்தில் பராமரித்தால் நல்ல முறையில் செயல்படுத்தவும், திறந்தவெளி கழிப்பிடங்களை கட்டுப்படுத்தவும் முடியும். பாழடைந்த சுகாதார வளாகங்களை செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.